பசி,தூக்கம், காமம் இவை கடவுள் எல்லா உயிர்களுக்கும் இயற்கையாகவே கொடுத்தது.இவை யாவும் ஆசைகள் இல்லை தேவைகள்.இவற்றில் எதுவும் தவறு இல்லை.ஆனால் மிதமிஞ்சிய ,முறையற்ற செயல்பாடுகளே தவறு.இயற்கையை நன்கு உற்று நோக்கினால் செடி,மரம்,விலங்குகள் என யாவும் பிறக்கின்றன ,வாழ்கின்றன, சாப்பிடுகின்றன, இனத்தைப் பெருக்குகின்றன.இயற்கையில் இதற்கு மேலான அர்த்தமோ ரகசியமோ இல்லை.ஏனென்றால் அவைகளெல்லாம் அளவான சுதந்திரத்தோடு படைக்கப்பட்டவை.மனிதன் மாத்திரமே எல்லைஅற்ற சுதந்திரத்தோடும் ,இறைவன் எனும் விதையை தனக்குள் கொண்டும் படைக்கப்பட்டிருக்கின்றான்.அவ்வ ாறு இறைவனைப்போல் ஆன அநேகம் மகான்களும் சித்தர்களும் உலகெங்கும் எல்லா காலங்களிலும் தோன்றியவாறே உள்ளனர்.என் சக மனிதனுக்கு சாத்தியமானது எனக்கும் சாத்தியமே என உணர்ந்து வாழ்வை சரியாகவும்,முழுமையாகவும் வாழ்ந்து ,சில அப்யாசங்களையும் செய்து வர நமக்குள் உள்ள இறைவன் எனும் விதை மரமாகி நமக்கும் உலகுக்கும் பயன்பட வாழலாம்.அதற்கு உடல்,பிராணன்,மனம்,ஆத்மா,பொருளா தாரம் என எல்லா அம்சங்களிலும் சிறந்து விளங்கவேண்டும்.
No comments:
Post a Comment