Friday, 20 December 2013

லட்சுமிதேவி எங்கும், எப்பொழுது வேண்டுமானாலும் வருவாள்

ஒருசமயம் லட்சுமிதேவி எந்த வீட்டிலும் வாசம் செய்யலாம் என்று பார்க்க வந்தாள். ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு வீட்டில் மாடும், கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும், குப்பையுமாக இருந்தது. மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை. மனைவி தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். 

நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து அந்த இல்லத்தரசி ஸ்லோகங்களாக சொல்லிக் கொண்டு இருந்தாள். வாசலில் நின்ற வரலட்சுமியை பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள். 

மனையை போட்டு அமர வைத்து விட்டு உள்ளே போய் பால் எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் அந்த சுமங்கலி இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடந்தது. அதாவது லட்சுமிதேவி எங்கும், எப்பொழுது வேண்டுமானாலும் வருவாள்

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்திலும் பிறந்தவர்களுக்கு இல்லாத வகையில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் தோஷங்கள் அதிகம் என்று சொல்வார்கள். பொதுவாக, மூல நட்சத்திரம் உள்ளவர்களால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் அவ்வளவு சிறப்பு ஏற்படாது. மேலும் மூல நட்சத்திரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய கிழமைகளில் பிறந்தவர்கள் எல்லா வகையிலும் அதிர்ஷ்ட வாய்ப்பை இழப்பார்கள். 

மூல நட்சத்திரக்காரர்கள் காலை வேளையில் பிறந்தால் அவர்களுடன் பழகுபவர்களுக்கு கஷ்டம் வரலாம். மாலை வேளையில் பிறந்தால் அவரின் தாய் பிறந்த வீட்டிற்குக் கஷ்டம் வரும். இதுபோன்ற தோஷங்கள் இருப்பதால் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திருமணம் ஒரு தடையாக மாறி விடுகிறது. 

பரிகாரம் வாயிலாக மேற்கண்ட தோஷத்தைச் சரி செய்யலாம் என்று அகத்தியர் உள்ளிட்ட சித்தர்கள் வழிகாட்டி உள்ளார்கள். பரிகாரங்கள் விவரம் வருமாறு:- 

1. சிவன் கோவில் தல விருட்சத்தின் வேர்ப்பகுதியில் உள்ள மண் ஒரு கைப்பிடி. 
2. யானை மிதித்த இடத்து மண் ஒரு கைப்பிடி. 
3.பசுவின் கால் பட்ட இடத்து மண் ஒருகைப்பிடி. 
4. புற்று மண் ஒரு கைப்பிடி. 
5. வயல்வெளியில் உள்ள நண்டு வளையின் புற்றுமண் ஒருகைப்பிடி. 
6. கண்மாயில் உள்ள மண் ஒரு கைப்பிடி. 
7. கடற்கரை மண் ஒரு கைப்பிடி. 

மேற்கண்ட ஏழு வகையான மண்ணை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். மூல நட்சத்திரத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மேற்படி மண்ணை உடல் முழுக்கத் தடவி 45 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும். இதனால் தோஷங்கள் நிவர்த்தி ஆகி பரிகாரம் செய்த 90 நாட்களுக்குள் திருமணம் சுபமாக நடக்கும்.

Monday, 2 December 2013

கரிப்பான் இலையின் மருத்துவக் குணங்கள்

கரிப்பான் இலையின் மருத்துவக் குணங்கள்
Photo: கரிப்பான் இலையின் மருத்துவக் குணங்கள்

மூலிகைகளில் கரிசலாங்கண்ணி கரிப்பான் மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனஅழைக்கின்றனர்.. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.

100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாறில் உள்ள சத்துகள்.

மாவுப்பொருள்-9.2%
புரதம்-4.4%
நீர்-85%
கொழுப்பு-0.8%
கால்சியம்-62 யூனிட்
இரும்புத் தாது-8.9 யூனிட்
பாஸ்பரஸ்-4.62%

மருத்துவக் குணங்கள்:

உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும். கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும். உடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல் வளம் பெறும்.
    
புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும். ஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது. விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி  தோல் பிணிகளைக் குணமாக்கும்.
மூலிகைகளில் கரிசலாங்கண்ணி கரிப்பான் மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனஅழைக்கின்றனர்.. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம்கொண்ட காய கல்ப மூலிகை.

100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாறில் உள்ள சத்துகள்.

மாவுப்பொருள்-9.2%
புரதம்-4.4%
நீர்-85%
கொழுப்பு-0.8%
கால்சியம்-62 யூனிட்
இரும்புத் தாது-8.9 யூனிட்
பாஸ்பரஸ்-4.62%

மருத்துவக் குணங்கள்:

உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும். கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும். உடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல் வளம் பெறும்.

புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும். ஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது. விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி தோல் பிணிகளைக் குணமாக்கும்

கறிவேப்பிலையின் மருத்துவப்பயன்

கறிவேப்பிலையின் மருத்துவப்பயன்
Photo: கறிவேப்பிலையின் மருத்துவப்பயன்

கறிவேப்பிலை இலைகளை நன்கு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி எடுத்து, இதனுடன் தேவையன அளவு மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவை எடுத்து நன்கு பொடி செய்து சேர்த்து, சோற்றுடன் கலந்து, சிறிது நெய் சேர்த்து உண்டு வர மந்தம், பசியின்மை, மாந்த பேதி முதலியவை நீங்கி, உண்ட உணவை நன்கு சீரணிக்கவும் செய்யும்.

கறிவேப்பிலை இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்து நன்கு கலக்கி, அந்நீரை சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு வயதுக்கு தக்கவாறு கொடுத்து வர, மாந்தத்தை நீக்கி பசியைத் தூண்டும். கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு 1 பிடி சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் தினம் 4 வேளைக் கொடுக்க சளி, இருமல், சுரம், வாதசுரம் தீரும்.

ஒரு பிடி இலையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து புன்னைக் காயளவு வெறு வயிற்றில் 45 நாட்கள் கொடுக்கப் பிட்ட மிகுதியால் வந்த பிதற்றல் பைத்தியம் தீரும். கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது சர்கரைப் பொடி கலந்து காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர நீர் கோவை சூதக வாய்வு தீரும்.

கருவேப்பிலை ஈர்க்கின் மேல் தோலை தாய்பால் விட்டு இடித்து சாறு பிழிந்து, அதனுடன் சிறுதளவு கிராம்பு, திப்பிலி, பொடிசெய்து சேர்த்து, வாந்தி இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம். இது சீரண சக்தியைத் தூண்டும். கருவேப்பிலையின் வேர்பட்டையை ஊற வைத்த ஊறல் குடிநீரை அறுபது மி.லி. அளவு இரண்டு வேளை அருந்தி வந்தால் வாந்தி நிற்கும்.

அஜீரணக் கழிச்சல், சீதக்கழிச்சல் உடையவர்கள் கருவேப்பிலை இலையை ஒரு கைப்பிடி அளவு பச்சையா உண்டு வருவது நல்லது. கருவேப்பிலையை முறைப்படி குடிநீராகக் காய்ச்சி அருந்தி வந்தால் இது வெப்பத்தை அகற்றி , சுரத்தைக் குணப்படுத்தும். கருவேப்பிலை இலைச் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறும் தேவையான அளவு சர்கரையும் கலந்து அருந்தி வர, அஜீரணத்தால் ஏற்படுகின்ற வாந்தி ஒக்காளம் முதலியவைகளுக்கு நல்ல குணம் தரும்.

கருவேப்பிலை இலைத்துளிரிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் தேன் கலந்து அருந்த பேதி, சீதபேதி, மூலம் இவைகளுக்கு நல்லது. பரம்பரையின் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கு, உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கும், தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

கருவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும். இதில் மயிர்கால்களை வலுவூட்டும் சத்து இருக்கிறது. மேலும் இந்த கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. கருவேப்பிலை இலையை சமையலில் அதிகமாகச் சேர்ப்பது நம் நாட்டு வழக்கம். குழம்பு, கூட்டு, மிளகுநீர், கறிவகைகள், கருவேப்பிலைப் பொடி, நீர்மோர், துவையல் முதலியவைகளில் கருவேப்பிலை சேர்க்கப்படுகிறது.

மருத்துவப் பயன் நிறைந்த வெந்தயம்

மருத்துவப் பயன் நிறைந்த வெந்தயம்

Photo: மருத்துவப் பயன் நிறைந்த வெந்தயம்

வெந்தயம் ஒரு சிறு செடி, சுமார் 60 செ.மீ. உயரம் வரை வளரும்.. இதன் இலை நேர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் மூன்றாகப் பிறியும் 5 செ.மீ. நீளமுடையது. இது செடியாக இருக்கும் பொழுது பூ பூக்கும் பூ வெண்மை நிறமாக முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். செடியாக இருக்கும் போது கீரையாகப் பறித்துப் பயன் படுத்துவார்கள். 

பூக்கள் முற்றிக் காய்கள் உண்டாகும். அதைக் காயவைக்கவேண்டும். காய்ந்த விதையை வெந்தயம் என்பார்கள் விதை இரு பிளவு போன்றிருக்கும்  அது 50 -110 மில்லி  நீளம் இருக்கும். அது மரக்கலரில் இருக்கும். ஒரு கிலோ வெந்தயத்தில் சுமார் 50,000 விதைகள் இருக்கும்.  இது மூன்று மாத த்தில் வளரக்கூடியது. இதை சமையல் செய்வதற்கும் மருந்தாகவும் பயன் படுத்துவார்கள்

ஒரு கிலோ வெந்தயத்தில் சுமார் 50,000 விதைகள் இருக்கும்.  இது மூன்று மாத த்தில் வளரக்கூடியது.  இந்தச் செடியை ஆதிகாலத்தில் மாட்டுத்தீவனமாகவும் பயன் படுத்தினார்கள்.  இதை சமயல் மற்றும், மருந்தாகவும் பயன் படுத்துவார்கள்.சர்வ சாதாரணமாக நாம் பயன்படுத்தும் வெந்தயம் வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தக்கூடியது. தாய்பால் சீராக வராத தாய்மார்கள் வெந்தயம் சாப்பிட்டு வருவதன் மூலம் தாய்பால் பெருகும்.  

தீக்காயம் மற்றும் தீப்புண் ஏற்பட்டு இருப்பின் வெந்தயத்தை பொடி செய்து பற்றிட்டு வர எளிதில் தீக்காயம் குணமாகும்.
மேலும் மதுமோகம் கொண்டவர்கள் வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும். 

உடலில் சூட்டினால் ஏற்படக்கூடிய கட்டிகள் பழுத்து உடையச் செய்வதற்கு வெந்தயத்தை வைத்து தொடர்ந்து கட்டி வர கட்டிகள் உடைந்துவிடும் வலியையும் போக்கும் தன்மை கொண்டது.. சர்க்கரை வியாதியை குணமாக்க கூடியதில் வெந்தயமும் இடம்பெரும்.

பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.
ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சலி தணிந்து ஆறும். வெந்தியப்பொடியை ஒரு தேக்கரண்டியாக்க் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.

வெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை  பழுத்து உடையும்.

இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்து, அதிகாலை வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீர்ழிவு நோய் சிறிது சிறிதாக  வீரியம் குறையும்.

பெண்கள் தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது. முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடு சேர்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலையில் தேய்த்து பின்னர் தலைகுளித்து வந்தால் உடல் சூடு தணிவதோடு முடியும் நன்கு வளரும்..

முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.

ஆரோக்கிய வாழ்வு தரும் மிளகு

ஆரோக்கிய வாழ்வு தரும் மிளகு

இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோய்யும் நெருங்கியதில்லை.. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது.

உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.

நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது... புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது. இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..

ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து.. மேலும் பல் வலி பல் சிதைவு பான்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.

முடிந்த மட்டும் மிளகு பொடியை வீட்டிலே தயார் செய்யுங்கள். கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.. ஒரு சிட்டிகை அளவு மிளகு பொடி சேர்த்து சமைத்தால் சுவை மற்றும் செரிமானம் கிடைக்கிறது. உடல் நலத்தில் ஒட்டு மொத்த சுகாதாரத்திற்கும் மிளகு நல்லது. அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.

கீரை மருத்துவம்

கீரை மருத்துவம்

விலை மலிவான சாதாரணப் பொருட்களிலும், நிறைய பலன்களைப் பெற முடியும் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு கீரைகள். கீரைகள் தினமும் எடுத்து கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள் முதியோர்கள். சில முக்கிய கீரைகளின் பயன்கள் உங்களுக்காக:

அரைக்கீரை:

தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும். பிரசவமான மகளிர்க்கு உடனடி ஊட்டம் அளிக்கும்.

மணத்தக்காளி:

வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்குக் கண்கண்ட சஞ்சீவி. மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல் வளம் பெருக்கும். அல்சருக்கு அற்புத மருந்து. வாரம் 2 முறை உண்ணத்தக்கது.

பசளைக்கீரை:

மலச்சிக்கலை விரட்டும். ஆண்மையைப் பலப்படுத்தும். குளிர்ச்சி தரும். இக்கீரையை ஆஸ்துமா போன்ற நோயுடையவர்கள் கோடை காலத்தில் மட்டுமே உண்ணவும்.

வெந்தியக்கீரை:

வாயுவைக் கண்டிக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பக்கும். புரதம், தாதுக்கள், வைட்டமின் சி இதில் ஏராளம். வாரம் 1 முறை உண்டு வர மூட்டுவலி, இடுப்புப் பிடிப்பு போன்றவை நீங்கும். சிறுநீர் கோளாறு அண்டாது.

முளைக்கீரை:

எவ்வயதினரும், தினமும் உண்ணக்கூடியது. நல்ல பசியைத் தூண்டும். காச நோயின் போது வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

அகத்திக்கீரை:

வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும். கண்பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும். கிருமிகளைக் கொல்லும். ஆனால், இதனை வயிற்றுக் கோளாறுடையோர், வயோதிகர் உண்ணலாகாது. மாதம் ஒரு முறையே இது உண்ணத்தக்கது.

கரிசலாங்கண்ணி கீரை:

வள்ளலாரால் கல்பத்திற்கு இணையாக இது பேசப்படுகிறது. கபம், பித்தவாயுவையும் கண்டிக்கும். மூலநோய், நாட்பட்ட கிராணி இவற்றிற்கு மாமருந்து
பசி,தூக்கம், காமம் இவை கடவுள் எல்லா உயிர்களுக்கும் இயற்கையாகவே கொடுத்தது.இவை யாவும் ஆசைகள் இல்லை தேவைகள்.இவற்றில் எதுவும் தவறு இல்லை.ஆனால் மிதமிஞ்சிய ,முறையற்ற செயல்பாடுகளே தவறு.இயற்கையை நன்கு உற்று நோக்கினால் செடி,மரம்,விலங்குகள் என யாவும் பிறக்கின்றன ,வாழ்கின்றன, சாப்பிடுகின்றன, இனத்தைப் பெருக்குகின்றன.இயற்கையில் இதற்கு மேலான அர்த்தமோ ரகசியமோ இல்லை.ஏனென்றால் அவைகளெல்லாம் அளவான சுதந்திரத்தோடு படைக்கப்பட்டவை.மனிதன் மாத்திரமே எல்லைஅற்ற சுதந்திரத்தோடும் ,இறைவன் எனும் விதையை தனக்குள் கொண்டும் படைக்கப்பட்டிருக்கின்றான்.அவ்வாறு இறைவனைப்போல் ஆன அநேகம் மகான்களும் சித்தர்களும் உலகெங்கும் எல்லா காலங்களிலும் தோன்றியவாறே உள்ளனர்.என் சக மனிதனுக்கு சாத்தியமானது எனக்கும் சாத்தியமே என உணர்ந்து வாழ்வை சரியாகவும்,முழுமையாகவும் வாழ்ந்து ,சில அப்யாசங்களையும் செய்து வர நமக்குள் உள்ள இறைவன் எனும் விதை மரமாகி நமக்கும் உலகுக்கும் பயன்பட வாழலாம்.அதற்கு உடல்,பிராணன்,மனம்,ஆத்மா,பொருளாதாரம் என எல்லா அம்சங்களிலும் சிறந்து விளங்கவேண்டும்.
வாழ்க்கையை சந்தோசமாக வாழ கற்றுகொல்லுகள் , பிரச்சனை இல்லாத இடம் உண்டஆ , பிரச்சனை ஏற்படும்போது மன அமைதியாக தீர்வு பற்றி முடிவு முயற்சி செயுங்கள் . அலுவதலோ சண்டைபோடுவதலோ எந்த தீர்வும் கிடைக்காது . மலை கலைகினாலும் மாத்திரம் கலைகினாலும் மதிரதூல்லொர் கலங்கினாலும் மனம் கலங்காது இருக்க கற்றுகொள்ளுங்கள் . தற்போது உணவுர்வுகளுக்கு மட்டுமே இடம் தருகிறார்கள் , அறிவுக்கு இடம் கொடுங்கள் , எந்த வினைக்கும் எதிர் வினை வந்தே தீரும் , நல்ல வினை மட்டும் முயற்சிக்க

மனு முறைகண்ட வாசகம்:

மனு முறைகண்ட வாசகம்:
--------------------------------------
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ !
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ !
வலிய வழக்கிட்டு மானம் கெடுத்தேனோ !
வரவு போக்கு ஒழியவழி அடைத்தேனோ !
தானம் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ !
தருமம் பாராது தண்டம் செய்தேனோ !
கலந்த சிநேகரைக் கலகம் செய்தேனோ !
களவு செய்வோருக்கு உளவு சொன்னேனோ !
மனம்ஒத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ !
மண்ணோரம் பேசி வாழ்வு அழித்தேனோ !
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ !
குடிக்கின்ற நீருள்ளக் குளத்தைத் தூர்த்தேனோ !
ஏழைகள் வயிறு எரிய செய்தேனோ !
இரப்போர்க்குப் பிச்சை இல்லை !
உயிர்க்கொலை செய்வோருக்கு உபகாரஞ் செய்தேனோ
ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ !
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ !
பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ !
அன்புடையர்க்குத் துன்பம் செய்தேனோ !
வேலையிடுக் கூலிகுறைத்தேனோ !
வெய்யிலுக் கொதுங்கும் விருட்சத்தை அழித்தானோ !
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரை அழித்தானோ !
கோள் சொல்லிக் குடும்பம் கலைத்தேனோ!
கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந் திருந்தேனோ !
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ !
கருப்பம் அழித்துக் களித் திருந்தேனோ !
கற்றவர் தம்மைக் கடு கடுத்தேனோ!
கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ !
குருவை வணங்கக்கூசி நின்றேனோ !
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ !
பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ !
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ !
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ !
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
சுத்த ஞானிகளைத் தூசனனம் செய்தேனோ !
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வத்தை இகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்னபாவம் செய்தேனோ இன்னதென்று அறியேனே !

Saturday, 16 November 2013

திருநாவுக்கரசர் திருநாமங்கள் (திருத்தொண்டர் புராணத்திலிருந்து)

திருநாவுக்கரசர் திருநாமங்கள் (திருத்தொண்டர் புராணத்திலிருந்து)
வ. எண்பெயர்புராணம் பாடல் எண்
1.அஞ்சொல் தொடைத் தமிழாளியார்588 (தி.நா.பு)
2.அடித் தொண்டர்383
3.அடி பணியாமுன் பணியும் அரசு10 (அப்.பு)
4.அந்தமிலாத் திருவேடத்து அரசு270 (தி.ஞா.பு)
5.அந்தமிழ் ஆளியார்41 (அப்.பு)
6.அரசு139 (தி.நா.)
7.அருந்தமிழ் வேந்தர்115 (தி.நா.பு)
8.அருள் திருநாவுக்கரசு274 (தி.ஞா.பு)
9.அறந்தரு நாவுக்கரசு11 (தி.நா.பு)
10.அறிவிற் பெரியவர்159 (தி.நா.பு)
11.அன்பர்142
12.அன்புறு பத்திவடிவான வாகீசர்400
13.ஆண்ட அரசு94, 97, 106, 118, 145, 182, 189, 201, 203, 218, 232, 258, 270, 273, 283, 306 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
14.ஆண்டசீர் அரசு1, 7, 19 (பெ.புராணம் - அப்.அடிகள் புராணத்தில்); 573, 928, 929, 946 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
15.ஆண்ட திருநாவுக்கரசர்321, 402, 416, 427, 429, (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
16.ஆளுடைய நாகந்தன் அருள் பெற்றவர்199 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
17.ஆழிமிசைக் கல்மிதப்பில் வந்தார்492 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
18.இன்தமிழ் ஈசர்137 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
19.இன்றமிழ்க்கீசரான வாகீசத்திருமுனி147 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
20.உடைய அரசு83 (பெ.புராணம் - தடுத்.ஆ. புராணத்தில்).
21.உயர்தமிழ் இறையோர்160 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
22.உரவு கடற்கல் மிதப்பில் வந்தார்496 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).
23.உரனுடைய நாவுக்கரசர்401 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
24.உலகேத்தும் உழவாரப் படையாளி83 (பெ.புராணம் - தடுத்.ஆ.புராணத்தில்).
25.உழவாரப் படையாளி332 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
26.உறைப்புடை மெய்த்தொண்டர்125 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
27.எண்ணமுடிக்கும் வாகீசர்296 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
28.எல்லையில்சீர் வாகீசர்400 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
29.ஓங்கு நாவினுக்கரசர்367 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
30.கருணை நாவரசு130 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
31.கலை மொழிக்கு நாதர்269 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
32.கலைவாய்மைக் காவலனார்347 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
33.காதலன்பர்269 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
34.காரமண்வெஞ்சுரம் அருளால் கடந்தார்576 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
35.கோதில்மொழிக் கொற்றவனார்12 (பெ.புராணம் - அப்.அடிகள்.புராணத்தில்).
36.சீரின் விளங்கும் திருத்தொண்டர்255 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).
37.சீர்வளர் தொண்டர்272 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)
38.சூலைமடுத்து முன்ஆண்ட தொண்டர்318 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
39.செஞ்சடையர் சீர்விளங்கும் திறலுடையார்104 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
40.செந்தமிழ்ச் சொல் வேந்தர்547 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)
41.செம்மையார்359 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
42.செவ்வாறு மொழிநாவர்936 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)
43.சொல்லின் அரசர்219 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
44.சொல்கலையின் பெருவேந்தர்343 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
45.சொல்லின் பெருவேந்தர்945 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)
46.சொல்லினுக்கு நாதர்315 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
47.சொற்பொரு வேந்தர்497 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
48.ஞான அரசு299 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
49.ஞானத்தவ முனிவர்1 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
50.தமிழ் மொழித்தலவர்598 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)
51.தமிழாளியார்360 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
52.தமிழ் வேந்தர்331 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
53.தாபதியார்78 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
54.திருத்தாண்டகச் செந்தமிழ்ச் சாற்றி வாழ்பவர்143 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
55.தூய புகழ் வாகீசர்399 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
56.தொண்டர்139 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
57.தொண்டாண்டு கொண்டபிரான்141 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
58.தொழுகை நாவினுக்கரசு133 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
59.நற்றமிழ் வல்லநாவுக்கரசு(பெ.புராணம் - சுந்தரர் புராணத்தில்)
60.நாமரு சொல்லின் நாதர்237 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
61.நாவினிசை அரசர்565 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)
62.நாவினுக்குத் தனி அரசர்229 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
63.நாவினுக்கு மன்னர்197 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
64.நாவின் தனி மன்னவர்305 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
65.நாவினுக்கு வேந்தர்948 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)
66.பரமுனிவன்429 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
67.பார்பரவு சீர் அரசு535 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)
68.பார்பரவும் திருமுனிவர்149 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
69.பெருந்தகையார்67 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
70.பெருந்தன்மை திருநாவுக்கரசு144 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
71.பெருந்தொண்டர்298 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
72.பெருவாய்மைத் திருநாவுக்கரசர்569 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
73.பேரிசைத் திருநாவுக்கரசு272 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)
74.பொய்ப் பாசம் போக்குவார்412 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
75.பொடிநீடு திருமேனி புனிதர்407 (தி.நா.)
74.போத மாதவர்371 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
76.மண்பரவும் பெருங்கீர்த்தி வாகீசர்393 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
77.மன்னு மாதவர்374 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
78.மன்னு புகழ் வாகீசர்944 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)
79.மெய்த்தவர்356 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
80.மெய்ப்பொருள் தேர் நாவினுக்கு வேந்தர்200 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
81.மொழிக் கொற்றவர்202 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
82.மொழி நாவர்936 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
83.மொழிவேந்தர்304 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
84.வாகீச மாமுனிவார்947 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)
85.வாகீசத் திருவடி109 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
86.வாகீசர்1 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
87.வாக்கின் காவலர்617 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)
88.வாக்கின் பெருவிறல் மன்னர்269 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)
89.வாக்கின் மன்னர்131 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
90.வாய்மை திறம்பா வாகீசர்275 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)
91.வாய்மூர் அரசர்596 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)
92.விளங்குமொழி வேந்தர்581 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)
93.விறலுடைத் தொண்டர்29 (பெ.புராணம் - அப்.அடிகள். புராணத்தில்)

Friday, 25 October 2013

சிலப்பதிகாரம்

இளங்கோவடிகள்

இயற்றிய

சிலப்பதிகாரம்

பதிகம்
(இணைக் குறளாசிரியப்பா)

குணவாயில் கோட்டத்து, அரசு துறந்து இருந்த,
குடக்கோச் சேரல் இளங்கோ அடிகட்கு
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடி
'பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்,
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு, 5

அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி, அவள்
காதல் கொழுநனைக் காட்டி, அவளொடு, எம்
கண்-புலம் காண, விண்-புலம் போயது
இறும்பூது போலும்; அஃது அறிந்தருள் நீ' என- 
அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன், 10

'யான் அறிகுவன் அது பட்டது' என்று உரைப்போன்,
'ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்,
பேராச் சிறப்பின் புகார் நகரத்துக்
கோவலன் என்பான் ஓர் வாணிகன், அவ் ஊர்
நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு 15

ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடுஉற,
கண்ணகி என்பாள் மனைவி - அவள் கால்
பண் அமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர்
மாட மதுரை புகுந்தனன் அது கொண்டு 20

மன்பெரும் பீடிகை மறுகில் செல்வோன்
பொன் செய் கொல்லன்-தன் கைக் காட்ட
"கோப் பெருந் தேவிக்கு அல்லதை, இச் சிலம்பு
யாப்புறவு இல்லை; ஈங்கு இருக்க" - என்று ஏகி
பண்டு தான் கொண்ட "சில் அரிச் சிலம்பினைக் 25

கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை" என 
வினை விளை காலம் ஆதலின், யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி,
கன்றிய காவலர்க் கூஉய், "அக் கள்வனைக்
கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு" - என 30

கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி
நிலைக்களம் காணாள், நெடுங்கண் நீர் உகுத்து,
பத்தினி ஆகலின், பாண்டியன் கேடுஉற,
முத்து ஆர மார்பின் முலைமுகம் திருகி,
நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய 35

பலர் புகழ் பத்தினி ஆகும் இவள்' என-
'வினை விளை காலம் என்றீர்; யாது அவர்
வினை விளைவு?' என்ன - 'விறலோய்! கேட்டி:
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்,
கொன்றை அம் சடைமுடி மன்றப் பொதியிலில் 40

வெள்ளி அம்பலத்து, நள் இருள் கிடந்தேன்;
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன்
மதுரை மாதெய்வம் வந்து தோன்றி,
'கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்!
முதிர் வினை நுங்கட்கு முடிந்தது; ஆகலின், 45

முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபம் கட்டியது; ஆகலின்,
வார் ஒலி கூந்தல்! நின் மணமகன்-தன்னை 50

ஈர் ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி,
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவில் காண்டல் இல்' எனக்
கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான்' என
'அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம், 55

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்' என 60

'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது,
அடிகள்! நீரே அருளுக' என்றாற்கு அவர்,
மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர்
மனையறம் படுத்த காதையும், நடம் நவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும், 65

அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையும்,
இந்திர விழவு ஊர் எடுத்த காதையும்,
கடல் ஆடு காதையும்,
மடல் அவிழ் கானல் வரியும், வேனில் வந்து இறுத்தென
மாதவி இரங்கிய காதையும், தீது உடைக் 70

கனாத் திறம் உரைத்த காதையும், வினாத் திறத்து
நாடு காண் காதையும், காடு காண் காதையும்,
வேட்டுவ வரியும், தோட்டு அலர் கோதையொடு
புறஞ்சேரி இறுத்த காதையும், கறங்கு இசை
ஊர் காண் காதையும், சீர்சால் நங்கை 75

அடைக்கலக் காதையும், கொலைக்களக் காதையும்,
ஆய்ச்சியர் குரவையும், தீத்திறம் கேட்ட
துன்ப மாலையும், நண்பகல் நடுங்கிய
ஊர் சூழ் வரியும், சீர்சால் வேந்தனொடு
வழக்குரை காதையும், வஞ்சின மாலையும் 80

அழல் படு காதையும், அரும் தெய்வம் தோன்றிக்
கட்டுரை காதையும், மட்டலர் கோதையர்
குன்றக் குரவையும் என்று, இவை அனைத்துடன்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
வாழ்த்து, வரம் தரு காதையொடு 85

இவ் ஆறு ஐந்தும்
உரை இடையிட்ட பாட்டு உடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள, மதுரைக் 
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இது, பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபுஎன். 90

உரை பெறு கட்டுரை

அன்று தொட்டு, பாண்டிய நாடு மழை வறம் 
கூர்ந்து, வறுமை எய்தி, வெப்புநோயும் குருவும் 
தொடர, கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் 
நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக்
கொன்று, களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய, 
நாடு மலிய மழை பெய்து, நோயும் துன்பமும் நீங்கியது. 1

அது கேட்டு, கொங்கு இளங்கோசர் தங்கள் 
நாட்டகத்து, நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய, 
மழை தொழில் என்றும் மாறாதாயிற்று. 2

அது கேட்டு, கடல் சூழ் இலங்கைக் 
கயவாகு என்பான், நங்கைக்கு நாள் பலி - பீடிகைக் 
கோட்டம் முத்துறுத்து-ஆங்கு, 'அரந்தை கெடுத்து, 
வரம் தரும் இவள்' என, ஆடித் திங்கள் அகவையின், 
ஆங்கு ஓர் பாடி விழாக் கோள் பன் முறை எடுப்ப, 
மழை வீற்றிருந்து, வளம் பல பெருகிப் பிழையா 
விளையுள் நாடு ஆயிற்று. 3

அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி 
கோழி அகத்து, 'எத்திறத்தானும் வரம் தரும் இவள் ஓர் பத்
தினிக் கடவுள் ஆகும்' என, நங்கைக்குப் பத்தினிக் 
கோட்டமும் சமைத்து, நித்தல் விழா அணி நிகழ்வித்தோனே.